துயர் தீர்ப்பாயே அனுமானே

துயர் தீர்ப்பாயே அனுமானே துன்பம்போக்குவாயே  அனுமானே
இருளை நீக்குவாயே  அனுமானே அக இருளை நீக்குவாயே அனுமானே
நல்லதை தருவாயே அனுமானே நன்மைகள் பல  தருவாயே அனுமானே
என் கண் கண்ட தெய்வமே அனுமானே எங்கள் கவலை தீர்ப்பாயே அனுமானே


உன்னை யன்றி வேறு ஏதும் அறியேன் அனுமானே

உன்னை இன்றி  எனக்கோர்  துணை இல்லை அனுமானே
என் வாழ்வில் ஓர் துணையாய் இருப்பாய் அனுமானே
என் வாழ்வினையை போக்கி நல் வரம்  அருள்வாயே அனுமானே
என்ன சொல்லி உன்னை அழைப்பேன் அனுமானே
எந்தனுள்ளத்தில் கோயில் கொண்ட அனுமானே
உன் பதம் பணிவேன் அனுமானே
உன் அருளை வேண்டி என்றும் காத்திருப்பேன் அனுமானே
 உன் உருவை நெஞ்சில் வைத்தேன் அனுமானே
ஊக்கமுடன் ஓடி வருவாய் என்னருகே அனுமானே

என்ன புண்ணியம் செய்தேன் அனுமானே
உன்னடி தஞ்சமடைந்தேன் அனுமானே
உன் தரிசனம் கண்டேன் அனுமானே      

நல்லதே நினையும்  நல்லதேஉரையும் நல்லதே செய்யும்
என் ராம தெய்வம்
அல்லலை நீக்கும் அழிபகை போக்கும் அன்புடன் காக்கும்
என் ராம தெய்வம்
நித்தியம் உலகில் சத்தியம் காக்கும் உத்தமனாகும்
என் ராம தெய்வம்
எளிமையே உருவாம் இனிமையே வடிவாம் வளமெலாம் நல்கும்
என் ராம தெய்வம் 

Comments

Popular posts from this blog

108 திவ்ய தேச பெருமாள் தாயாரின் திவ்ய நாமங்கள்

ஆனந்த ராமதியானம்

ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்