Posts

Showing posts from November, 2013

ஆனந்த ராமதியானம்

ஆஞ்சநேயர் துதி கோதண்ட தீஷா குரு ராம நாம மதைத் தீ தண்ட  வாறு  அடியேன் செப்புதற்கு ​கோதண்டா மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற் கருணை வாருதியே நீ துணையே வா பெருமாள் துதி அண்டர்தம் துயரம் தீர அயோத்தி மாநகரில் வந்து தண்ட காரணியம்  சென்று சமுத்திர மீது அணையை கட்டி கொண்டு   ராவணனை  மாட்டக்  கோதண்டம் கையிலேந்தும் புண்டரீகக்கண்ணன் ராமன் பொன்னடிக்கமலம் போற்றி                                   பாலகாண்டம் தேவர்குறை  தீர்த்திடவே மூவரொடு அவதரித்தாய்   தசரதர்க்கு  பாலகனாய் புஜபலத்தோடே   ஜனித்தாய் கோசலைதன்  கர்பத்தில     கூசாமலே நீ  பிறந்தாய் தவமுனிக்கு உதவிசெய்ய கவனமுடன்  பின்சென்றாய்   தாடகையை சங்கரித்தாய்   பாட புகழ்   தானடைந்தாய்   கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் வில்  வளைக்க மிதிலை  சென்றாய்     ஜனகன்   வரலாறு   கேட்க   தனக்கு  பதில்  முனியுரைக்க...

ஆஞ்சநேயர் அஷ்டோத்திர வடிவ பாடல்

கதிரவனின் ஒளி யே  கருணையின்  வடிவமே   ஆஞ்சநேயா கதிரவனின் கதிரினும் கடிதில்  வருவாயே   ஆஞ்சநேயா கணமேனும்  உனை  மறவா  நிலையருள  வருவாயே  ஆஞ்சநேயா கண்களிலே  என்றென்றும்  நின்றருள  வருவாயே  ஆஞ்சநேயா வாயு  குமாரா காற்றோடு கலந்து  நீ  வருவாயே  ஆஞ்சநேயா அனுமான்  என்ற பெயரால்  என்னருகில்  வருவாயே   ஆஞ்சநேயா அனுமானிக்கும்   என்  பொருளில்  உதவிட வருவாயே ஆஞ்சநேயா இதயத்தை  திறந்து  இராமனைக்  காட்ட   வருவாயே  ஆஞ்சநேயா  இதயத்தில்  தூய்மையுடன்  பாடினால்  வருவாயே  ஆஞ்சநேயா வானரர்கள்  தலைவா  தரணியில்  வருவாயே  ஆஞ்சநேயா வானும் நிலனும் சிறக்க  நீ  வருவாயே  ஆஞ்சநேயா மனோவேகம்  கொண்டவனே நினைத்ததும்  வருவாயே  ஆஞ்சநேயா மனோதிடம்  என்றும்  எனக்கருள  வருவாயே  ஆஞ்சநேயா இந்திரியங்கள் ஐந்தும்  வென்றவா  வருவாயே  ஆஞ்சநேயா...

ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்

அந்தரர்  அமரர்  வாழ்த்தும்  ஆதியாய்  நின்ற  ஜோதி சுந்தர  ஆஞ்சநேயா சூரஸம்ஹார   வீரா  உந்தனைப்  புகழ்ந்து ரைக்க   உந்தன்  விஸ்தாரமெல்லாம் எந்தன்  நாவாலுரைக்க  எனக்கருள்  புரிவாயே                                                      வாயுபுத்ரா                      நமோ  நமோ வானவ மித்ரா                 நமோ  நமோ   ஆஞ்சநேய  பாலா         நமோ  நமோ                                          அரக்கர்  குலகாலா       நமோ நமோ                     ...

கண் நோய் அகல ஆரோக்கியம் உண்டாக

விவர்த்தனோ விவஸ் வாம்ச மார்த்தாண்டோ  பாஸ்கரோ  ரவி லோகப்  பிரகாசக  ஸ்ரீமான்  லோகசக்ஷு  மகேச்வர லோகசாக்ஷி  த்ரிலோகேச  கர்தா ஹர்தா  தமிஸ்ரஹா தபந: தாபநச்சைவ  சுசி: ஸப்தா ஸ்வ வாஹந : கபஸ்தி ஹஸ்த:  ப்ரம்மண்ய: ஸர்வ தேவ நகஸ்க்ருத : சரீர  ஆரோக்ய தச்சைவ தனவ்ருத்தி  யசஸ் கர                             Source: ஆதித்திய பிரம்மபுராணம்  தினமும்   காலை யி ல்  12 முறை    ஞா யி ற்று  கி ழ மை   மாத சங்கரமணங்களில்  108 முறை ஜபம் செய்து  நமஸ்காரம் செய்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்தால்  கண்  நோயும் சகல ரோகங்களும் அகலும்.

துயர் தீர்ப்பாயே அனுமானே

துயர் தீர்ப்பாயே அனுமானே துன்பம்போக்குவாயே  அனுமானே இருளை நீக்குவாயே  அனுமானே அக இருளை நீக்குவாயே அனுமானே நல்லதை தருவாயே அனுமானே நன்மைகள் பல  தருவாயே அனுமானே என் கண் கண்ட தெய்வமே அனுமானே எங்கள் கவலை தீர்ப்பாயே அனுமானே உன்னை யன்றி வேறு ஏதும் அறியேன் அனுமானே உன்னை இன்றி  எனக்கோர்  துணை இல்லை அனுமானே என் வாழ்வில் ஓர் துணையாய் இருப்பாய் அனுமானே என் வாழ்வினையை போக்கி நல் வரம்  அருள்வாயே அனுமானே என்ன சொல்லி உன்னை அழைப்பேன் அனுமானே எந்தனுள்ளத்தில் கோயில் கொண்ட அனுமானே உன் பதம் பணிவேன் அனுமானே உன் அருளை வேண்டி என்றும் காத்திருப்பேன் அனுமானே  உன் உருவை நெஞ்சில் வைத்தேன் அனுமானே ஊக்கமுடன் ஓடி வருவாய் என்னருகே அனுமானே என்ன புண்ணியம் செய்தேன் அனுமானே உன்னடி தஞ்சமடைந்தேன் அனுமானே உன் தரிசனம் கண்டேன் அனுமானே       நல்லதே நினையும்  நல்லதேஉரையும் நல்லதே செய்யும் என் ராம தெய்வம் அல்லலை நீக்கும் அழிபகை போக்கும் அன்புடன் காக்கும் என் ராம தெய்வம் நித்தியம் உலகில் சத்தியம் காக்கும் உத்தமனாகும் என் ராம தெய்வம் ...