ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்
அந்தரர் அமரர் வாழ்த்தும் ஆதியாய் நின்ற ஜோதி
சுந்தர ஆஞ்சநேயா சூரஸம்ஹார வீரா
உந்தனைப் புகழ்ந்து ரைக்க உந்தன் விஸ்தாரமெல்லாம்
எந்தன் நாவாலுரைக்க எனக்கருள் புரிவாயே
வாயுபுத்ரா நமோ நமோ
வானவ மித்ரா நமோ நமோ
ஆஞ்சநேய பாலா நமோ நமோ
அரக்கர் குலகாலா நமோ நமோ
ராம ஸகாயா நமோ நமோ
ரக்ஷித்தருள் வாய் நமோ நமோ
அசுர ஸம்ஹாரா நமோ நமோ
ஆ தித்ய சிஷ்யா நமோ நமோ
ஆ தித்ய சிஷ்யா நமோ நமோ
ஸுக்ரீவ துணைவா நமோ நமோ
சூரர்புகழ் வீரா நமோ நமோ
லங்கா தஹநா நமோ நமோ
ராக்ஷஸ பயங்கர நமோ நமோ
துளசி தாஸர்க்கருள் அனுமந்தா
துன்பம் தீர்ப்பாய் அனுமந்தா
சௌ பாலனை காத்த அனுமந்தா
ஸஞ்சீவிராயா அனுமந்தா
ஸஞ்சீவிராயா அனுமந்தா
சோளங்கி புரவாசா அனுமந்தா
ஸ்தோத்திரம் புரிந்தேன் அனுமந்தா
கலியுகதேவனே அனுமந்தா அனுமந்தா
காத்தருள் புரிவாய் அனுமந்தா
சரணம் சரணம் அனுமந்தா
தந்தருள்வாய் வரம் அனுமந்தா
கடைசி 2வரிகளை 16 தடவை சொல்லவும்.
Comments
Post a Comment